பல் வலி,பல் கூச்சத்தைப் போக்கும் எளிய வழிகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, November 17, 2024

பல் வலி,பல் கூச்சத்தைப் போக்கும் எளிய வழிகள்..!

 பல் வலி,பல் கூச்சத்தைப் போக்கும் எளிய வழிகள்..!


பற்களில் சிதைவு இருந்தால் மட்டும் தான் பல் கூச்சம் ஏற்படும் என்பது தவறு. பற்களின் மேற்பகுதியில் இருக்கும் 'எனாமல்' அடுக்கில் பாதிப்பு ஏற்படும் போதும் பல் கூச்சம் ஏற்படலாம். 40 வயதிற்கு மேல் எனாமல் அடுக்கு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். இதனாலும் பல் கூச்சம் வரலாம்.


சிலருக்கு துாக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கலாம். இதனாலும் இந்த எனாமல் அடுக்கில் பாதிப்பு ஏற்பட்டு பல் கூச்சம் வரலாம்.


பற்களில் ஏற்படும் வலி, கூச்சத்தை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக போக்கலாம்.


ஒரு டீஸ்பூன் கருப்பு எள்ளை இரவு முழுதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் விழுதாக அரைத்து, வெதுவெதுப்பான பாலில் கலந்து, பல் துலக்கிய பின், வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பினால் போதும். பல் கூச்சம் நாளடைவில் படிப்படியாக குறையும். மாலை நேரத்தில் மூன்று கொய்யா இலைகளை சுத்தம் செய்து, இரண்டு டம்ளர் நீர், இரண்டு கிராம்பு சேர்த்து ஒரு டம்ளராக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சூடு ஆறியதும் வாய் கொப்பளிக்கலாம்.


காலை, மாலை இரு வேளையும் இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தால் போதும். பல் வலி, கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு குறைந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment