இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் ரூ 89,100 முதல் 99,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, November 12, 2024

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் ரூ 89,100 முதல் 99,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

 இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் ரூ 89,100 முதல் 99,700 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு!


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு 'ஏ'& 'பி' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்(எஸ்ஐடிபிஐ) காலியாக உள்ள 72 உதவி மேலாளர் கிரேடு 'ஏ'& 'பி' பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


காலியிடங்கள்: 72


பணி: உதவி மேலாளர் (Assistant Manager Grade 'A' & 'B' )


உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்-50


மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-10


மேலாளர் 'பி' - சட்டம்-6


மேலாளர் 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)- 6


சம்பளம் விவரம்:


உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்ரூ.44,500 – 89,100/-


மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-ரூ.55,200 – 99,700/-


மேலாளர் கிரேடு 'பி' - சட்டம்-ரூ.55,200 – 99,700/-


மேலாளர் கிரேடு 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)-ரூ.55,200 – 99,700/-


வயது வரம்பு:


உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - பொது ஸ்ட்ரீம்-21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


மேலாளர் கிரேடு 'பி' - ஜெனரல் ஸ்ட்ரீம்-25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


மேலாளர் கிரேடு 'பி' - சட்டம்- 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்


மேலாளர் கிரேடு 'பி' - தகவல் தொழில்நுட்பம் (IT)- 25 வயதுக்குக் குறையாமலும் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


வயது தளர்வு:


எஸ்.சி./எஸ்.டி(SC/ ST): 5 ஆண்டுகள்


ஓபிசி(OBC): 3 ஆண்டுகள்


தேர்வு முறை:


முதல் கட்டம்-I: ஆன்லைன் தேர்வு (அனைத்து ஸ்ட்ரீம்/ கிரேடுகளுக்கும்)


இரண்டாம் கட்டம்: உதவி மேலாளர் கிரேடு 'ஏ' (பொது ஸ்ட்ரீம்) மற்றும் மேலாளர் கிரேடு 'பி' (பொது ஸ்ட்ரீம்)/ மேலாளர் கிரேடு 'பி' (சட்டம்) & மேலாளர் கிரேடு 'பி' (ஐடி)க்கான ஆன்லைன் தேர்வு


தகுதி: சம்பந்தப்பட்ட ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


எஸ்.சி./எஸ்.டி (ST/SC/EX-SERVICEMAN/PWD)- ரூ.175/-


ஓபிசி OBC(OTHERS)- ரூ.1100/-


விண்ணப்பிக்கும் முறை:


 https://www.sidbi.in/en/careers/careerdetails/sidbi-recruitment-officers-grade-a-b-general-specialist-2024


 என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-2.12.2024

No comments:

Post a Comment