வங்கியில் ரூ 85,920 ஊதியத்தில் பணிபுரிய 1500 காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 1500 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். பணியிடம், தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 1,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதில் தம்ழிநாட்டில் மட்டும் 200 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ் தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்
உள்ளூர் வங்கி அதிகாரி :1,500
இதில் தமிழ்நாட்டில் 200 பணியிடங்கள், கேரளாவில் 100 பணியிடங்கள், கர்நாடகாவில் 300 பணியிடங்கள், ஆந்திராவில் 200 பணியிடங்கள், தெலுங்கானாவில் 200 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு :
உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
இப்பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் குழு கலந்துரையாடல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொழிக்கான தகுதி தேர்வு நடைபெறும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம்,
தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx
என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
13.11.2024
ஆன்லைன் தேர்வு:
பின்னர் அறிவிக்கப்படும்.
பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment