கனமழை காரணமாக இன்று (29.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அம்மாவட்டத்தில் விடுமுறை என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு ஆட்சியர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேதியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் திருவள்ளூரில் இன்று விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் வழக்கம் போல செயல்படவுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment