கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26.11.2024)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக பல மாவட்டங்களில் இன்று (26.11.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(26.11.2024) விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு
* கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26.11.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இன்று, வடமேற்கு திசையில் தமிழகம் - இலங்கையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும்.
தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று 21 செ.மீ., மழை
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிகன மழை, அதாவது, 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
விழுப்புரம், கடலுார், அரியலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை அதாவது, 12 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
* ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment