நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 19, 2024

நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் பட்டதாரி  மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.


இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது.


தற்போது நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: Army Welfare Education Society


பணி: Post Graduate Teachers(PGT)


பணி: Trained Graduate Teachers(TGT)


பணி: Primary Teachers (PRT)


தகுதி: Accountancy, Biology, Biotechnology, Business Studies, Chemistry, Computer Science, Economics, English Core, Home Science, Information Practices, Mathematics, Physical Education, Physics, Political Science, Psychology போன்ற பாடப்பிரிவுகள் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், Computer Science, English, Hindi, Mathematics, Physical Education, Sanskrit, Science, SST போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் பயிற்சி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் அல்லது 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் மேற்கண்ட கல்வித் தகுதியுடன் மத்திய, மாநில அரசின் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்டும் சிஇடி,டிஇடி போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


சம்பளம்: சிபிஎஸ்இ விதிமுறையின்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு: பணி அனுபவம் இல்லாதவர்கள் 40-க்குள்ளும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நவம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.


விண்ணப்பிக்கும் முறை: www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.10.2024


எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும்.


தேர்வு முடிவுகள் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.


மேலும் விவரங்கள் அறிய


https://www.awesindia.com/pdf/2024/SEP/GEN%20INSTRS%20OST%20%202024.pdf



 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment