பித்தப்பைக் கல் கரைய எளிய இயற்கை முறைகள்..!
ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள , விதையுள்ள காய்) எடுத்துக் கொண்டு ஒரு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் கோவக்காய் (10), ஒரு எலுமிச்சம் பழத்தின் தோலை நறுக்கி போட்டு, மிளகு (2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் வெள்ளை மிளகு (8) சேர்த்து அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தப்பைக் கற்கள் கரையும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு:அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment