உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் முறைகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 22, 2024

உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் முறைகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்..!

 உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் முறைகளும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்..!


கல் உப்பு சமையலுக்கு மட்டுமல்ல, கிருமிநாசினியாகவும் செயல்படும். அதனால்தான், தொண்டையில் கிருமித்தொற்று ஏற்பட்டால் வெந்நீரில் கல் உப்புப் போட்டு கொப்பளிக்கிறோம்.


 இந்தக் கொப்பளித்தலை முறைப்படி எப்படி செய்ய வேண்டும்?


''நமது உடலில் பொதுவாக நோய் ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா (bacteria), வைரஸ் (virus) போன்ற நுண்ணுயிர்களை முற்றிலும் அழிக்கும் ஆற்றல் கல் உப்பிற்கு உண்டு. சமீபத்திய ஆய்வுகள் வெந்நீரில் கல் உப்புப் போட்டு வாய்க் கொப்பளித்தால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள கிருமிகள் நீங்குகின்றன என்று தெரிவித்திருக்கின்றன.



இந்தக் கொப்பளித்தல் முறைக்கு தூள் உப்பையோ, இந்துப்பையோ பயன்படுத்தக்கூடாது. கல் உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த உப்பில் மட்டுமே பல வகையான நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கின்றன. எலும்புகள் வலுவாக இருக்க, மூளை ஆற்றல் மேம்பட இந்தச் சத்துக்கள் தேவை. வாய்க்கொப்பளித்தல் எப்படி செய்ய வேண்டுமென்றால், வாயில் வைத்தால் 'ஆ' என்று சொல்லக்கூடிய அளவில் வெந்நீர் சூடாக இருக்ககூடாது. சூடு பொறுக்கும் தன்மை ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


தினசரி வாய்ப் கொப்பளிப்பவர்கள் 200 மில்லி வெந்நீரில்ல் ஒரு சிட்டிகை கல் உப்புப் போட்டு பயன்படுத்தினாலே போதும். வாயில் துர்நாற்றம், தொண்டையில் தொற்று, பற்களிடையே ரத்தக்கசிவு இருந்தால் 200 மில்லி வெந்நீரில் அரை டீஸ்பூன் கல் உப்புப் போட்டு வாய்க் கொப்பளிக்க வேண்டும். உப்பின் அளவு கூடினால் வாயினுள்ளே இருக்கும் பிஹெச் அளவில் மாற்றம் ஏற்பட்டு, செரிமானத்தில் பிரச்னை வரும், கவனம்.

No comments:

Post a Comment