சுவையான வாழைப்பூ குழம்பு செய்வது எப்படி?
தேவையானவை:
வாழைப்பூ - நான்கு
மடல்கள்,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும்.
புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இதனுடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.
No comments:
Post a Comment