சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் உதவும் கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 1, 2024

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் உதவும் கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்..!

 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனைக் குறைக்கவும் உதவும் கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்..!


கருப்பு கவுனி அரிசியின் வரலாறு:


கருப்புகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.


கருப்புகவுனி அரிசி நிறம்:


கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான்.


ஊதா அரிசியா கருப்பு அரிசியா?


கருப்பு கவுனி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். கருப்பு கவுனி அரிசியின் கருப்பு நிறத்தின் காரணம் இதில் அதிகப்பிடியான “Anthocyanins” என்ற மூலக்கூறு தான்.


கருப்புகவுனி தமிழகம் வந்த எப்படி:


பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது


கருப்புகவுனியும்-அரசரின் விருந்தும்:


சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.


Accupunture மருத்துவம்:


தமிழகத்தின் தொடு வர்மம்க்கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் Accupunture என்று அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்புகவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி பிரபஞ்ச சக்தியை உள்ள வாங்கும் கிரஹித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுனி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது. ஆயினும் விஞ்ஞானம் அதனை மாறுகிறது.


1 .கருப்புகவுனி அரிசியின் Antioxidants பலன்கள்:


கருப்புகவுனி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும், புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.


சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுனி அரிசி அந்தோசினனின் Antioxidants – Free Radical Damage பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது.


2. கருப்புகவுனி புற்று நோய்க்கு எதிரானது:


கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து.


3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation: 


கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக்(inflammation) என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edemaவைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases) தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது


4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க:


பிரவுன் அரிசி, கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த carbohydrate உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில், நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.


இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுனி மற்றும் unpolished brown ரைஸ் பயன்படுத்த வேண்டும் என்பதே.


5. கருப்பு கவுனி இதயத்தை பாதுகாக்கிறது


உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.


6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது:

கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது


கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease) என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது. இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், triglyceride மற்றும் total cholesterol அளவைக் குறைத்து, இதனால் Fatty liver diseaseக்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.


7. மன அழுத்தம்: 


மன அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவும்.


8. இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுனி:


கருப்புகவுனி அரிசியில் உள்ள அந்தோசினனின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.



9. சர்க்கரை குறைபாடு:



ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க டயாபடீஸ் என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசி உள்ள Antioxidants, நார்சத்து, அந்தோசினனின், போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.


10. Gluten அரவே அற்ற கருப்பு கவுனி :


கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. Gluten – அரிசிகள், சிறுதானியங்கள காணப்படுகிறது. சிலருக்கு Gluten ஒவ்வாமை ஏற்படும். 


இதனால் கருப்பு கவுனிஅரிசி தினசரி பயன்படுத்த Gluten-அல்ர்ஜி யிலிருந்து விடு பெறலாம்.


11. ஆஸ்துமா:



கொரியாவில் எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அறியப்படுவது யாதெனில். மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.


ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி?


அரிசி உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ குணங்கள் உள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே வித்தியாசமான, சுவையான உணவையும் உண்ணலாம். ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்...


நம்மில் பெரும்பாலானவர்கள் அரிசி உணவுகளையே அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறோம். எப்போதும் வெள்ளை அரிசி உணவுகளை எடுப்பதற்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ சத்துள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும். கூடவே வித்தியாசமான, சுவையான உணவையும் உண்ணலாம். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை


- ஒரு டம்ளர் (250கிராம்) கருப்பு கவுனி அரிசி எடுத்து மூன்று முறை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.


- ஒரு டம்ளர் அரிசிக்கு 8 டம்ளர் தண்ணீர் அல்லது அதற்கு மேலும் எடுத்துக் கொள்ளாலாம். 12 டம்ளர்க்கு மிகாமல் எடுத்து 12 மணி நேரம் ஊறவைக்கவும்(சாதாரண தண்ணீர் அல்லது சுடுநீர்).


- அரிசியை வேகவைக்கும்போது, எவ்வளவு அரிசி எடுக்குறோமோ, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் கஞ்சிக்குக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.


- 5 மடங்கு தண்ணீருக்குக் குறைவாகப் பயன்படுத்தக்கூடாது.


மறுநாள் குக்கரில் அரிசியுடன் 100 கி பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு, சிறிதளவு சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 to 15 நறுக்கிய சின்ன வெங்காயம், சிறிதளவு மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கடலெண்ணெய் அல்லது சமையல் எண்ணெயுடன், அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக 20 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் குக்கரை மூடி 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கிவிட்டு, குக்கரை திறந்ததும் உப்பு சேர்க்கவும். உப்பை முதலிலேயே அரிசியுடன் சேர்த்தும் வேக வைக்கலாம்


- அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தால் ருசி அதிகமாக இருக்கும். மேலே கூறியுள்ள பொருள்கள் இல்லாமல், அரிசியை மட்டும் வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.


கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்


மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின் இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.


முக்கியமாக கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்னைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்னை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தடுக்கவல்லது.

No comments:

Post a Comment