ரூ.50,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக முதுநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக முதுநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 383/HR/SE/NS-S & CS/2024-25
பணி: Senior Engineer
காலியிடங்கள்: 5
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபால் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager(HR NS-S & CS), Bharat Electronics Ltd., Jalahalli Post, Bengaluru - 560 013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 24.10.2024
மேலும் விவரங்கள் அறிய
https://bel-india.in/wp-content/uploads/2024/10/Microsoft-Word-E-IIIAdvertisement-01102024.pdf
கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment