தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்
தமிழகத்தில் அடுத்த மாதம் நான்கு நாட்கள், வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பரில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும்.
அதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை, கடந்த மாதம் 20-ம் தேதி துவக்கினர். வரும் 10-ம் தேதி வரை இப்பணி நடக்க உள்ளது.
இம்மாதம் 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் நவம்பர், 28ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம், நவம்பர், 9, 10, 23, 24 என, நான்கு நாட்கள் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து உள்ளது.
அந்த நாட்களில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை செய்யவும், மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் எழுதி உள்ளார்.
அடுத்த ஆண்டு ஜன., 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment