இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்களுக்கு ரூ 30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 13, 2024

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்களுக்கு ரூ 30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!

 இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்களுக்கு ரூ 30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!


இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


 விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.


இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன.


 இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.


‌ கல்வித் தகுதி என்ன? ‌


அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


‌ வயது வரம்பு ‌

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் Rs.30,000/-


‌ தேர்வு செய்வது எப்படி? ‌


எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்ப கட்டணம் ரூ.750.



‌ விண்ணப்பிப்பது எப்படி? ‌


https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.


மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://www.ippbonline.com/documents/31498/132994/1728628353297.+for+344+GDS+Executives-+Final.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.ippbonline.com/web/ippb/current-openings

No comments:

Post a Comment