தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் ரூ 27,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழரசு மாத இதழில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழரசு இதழில் பணியாற்ற விரும்புகிறவர்கள் விண்ண்பபங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் தமிழரசு மாத இதழில் பணியாற்ற தொகுப்பூதிய அடிப்படையில் ஆட்கள் நிரப்பபடவுள்ளனர். 3 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர்-காலிப்பணியிடங்கள்
சிறப்பு எடிட்டர் (தமிழ்) 1
மொழிபெயர்ப்பாளர் 1
கணினி இயக்குபவர் 1
மொத்தம் 3
சம்பள விவரம் :
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இருக்கும் இப்பணியிடங்களில் சிறப்பு எடிட்டர் - தமிழ் (Special Editor)பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ.27,000 மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
மொழிபெயர்ப்பாளர் (Tamil to English) பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ.23,000 மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
கணினி இயக்குபவர் பதவிக்கு தொகுப்பூதியமாக ரூ.12,000 மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
சிறப்பு எடிட்டர் (தமிழ்) பதவிக்கு தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது பத்திரிக்கை துறை அனுபவம் தேவை.
மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
செய்தி வெளியீடு, கட்டுரைகள், சிறப்பு வெளியீடுகளை தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
அதே போன்று, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் பதவிக்கு டிசைனிங் சாப்ட்வேர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கில பத்திரிக்கைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியுள்ளவர்கள் சுய விவரங்கள் அடங்கிய படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குனர் (வெளியீடுகள்),
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தமிழரசு அலுவலகம்,
எண் 5, இராஜீவ் காந்தி சாலை,
தரமணி
சென்னை - 600113
தொலைபேசி : 044-22542221 / 044-22542224
மின்னஞ்சல் :
tamilarasujournal@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள் :
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள் அடிப்படையில் 24.11.2024 தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment