தொழில்நுட்ப உதவியாளர், நூலகர் மற்றும் காப்பாளர்,உயிரியலாளர் பணிகளுக்கு ரூ 24,200 முதல் ரூ 35,000 வரை ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 8, 2024

தொழில்நுட்ப உதவியாளர், நூலகர் மற்றும் காப்பாளர்,உயிரியலாளர் பணிகளுக்கு ரூ 24,200 முதல் ரூ 35,000 வரை ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு..!

 தொழில்நுட்ப உதவியாளர்,நூலகர் மற்றும் காப்பாளர்,உயிரியலாளர் பணிகளுக்கு ரூ 24,200 முதல்  ரூ 35,000 வரை ஊதியத்தில் அரசு வேலை வாய்ப்பு..!


தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட வனத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகிய பிரிவுகளில் இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


தொழில்நுட்ப உதவியாளர் பணி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் கீழ் 12 மதங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.



மாவட்ட செய்தி மக்கள் தொடர்த்துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கவர்ணகிரி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு :


நூலகர் மற்றும் காப்பாளர் பதவிக்கு 01.07.2024 தேதியின் படி, BC 18-34,MBC 18-34, SC 18-37 வயதிற்கு இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :


தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு திறன்கள் வேண்டும்.


நூலகர் மற்றும் காப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate In Library and Information Science (C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.


சம்பள விவரம் :


7வது ஊதியக் குழு ஊதிய விகிதம் தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.


நூலகர் மற்றும் காப்பாளர் பதவிக்கு ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை வழங்கப்படும்.



தூத்துக்குடி வனத்துறையில் உள்ள உயிரியலாளர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.


கல்வித்தகுதி


உயிரியலாளர் பதவிக்கு உயிரியலாளர் வனவிலங்கு உயிரியல், விலங்கு அறிவியல், விலங்கு உயர் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎச்.டி அல்லது முதுகலை பட்டம் உடன் 2 ஆண்டு அனுபவம்.


சம்பள விவரம் :


உயிரியலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000 சம்பளமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :


இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள்


 https://thoothukudi.nic.in/ 


என்ற இணையத்தளத்தில் இதற்கான அறிவிப்பை பார்த்து அதிலுள்ள முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.



விண்ணப்பிக்க கடைசி நாட்கள்



தொழில்நுட்ப உதவியாளர்:


10.10.2024


நூலகர் மற்றும் காப்பாளர்


18.10.2024


உயிரியலாளர் :


15.10.2024


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

No comments:

Post a Comment