கனமழை காரணமாக இன்று. (23.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, October 23, 2024

கனமழை காரணமாக இன்று. (23.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 கனமழை காரணமாக இன்று. (23.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் இன்று (23.10.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தென் தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இதனிடையே, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


இந்நிலையில், கனமழை காரணமாக கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment