கன மழை காரணமாக இன்று (22.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 22, 2024

கன மழை காரணமாக இன்று (22.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்

 கன மழை காரணமாக இன்று (22.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டம்


கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே கனமழை பெய்துவருவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர். 22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

முன்னதாக, மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கனமழையாக பெய்யத் தொடங்கியது.


மொடக்குறிச்சி, எழுமாத்தூா், விளக்கேத்தி, குலவிளக்கு, மின்னப்பாளையம், கணபதிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி, அவல்பூந்துறை, ராக்கியாபாளையம், பொன்னம்பாளையம், ஆனந்தம்பாளையம், கரியாகவுண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த கனமழையால் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.



No comments:

Post a Comment