மத்திய அரசின் நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் 188 பணியிடங்களுக்கு ரூ 50,000 க்கு மேல் ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, October 27, 2024

மத்திய அரசின் நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் 188 பணியிடங்களுக்கு ரூ 50,000 க்கு மேல் ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 மத்திய அரசின் நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்  பல்வேறு பிரிவுகளில் 188 பணியிடங்களுக்கு ரூ 50,000 க்கு மேல் ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


மத்திய அரசின் நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இருக்கும் டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


மத்திய அரசின் நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டிரைய்னி உள்ளிட்ட பதவிகளில் 188 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


பணியின் விவரங்கள் :


விஜிலென்ஸ், எச்.ஆர், தரக் கட்டுபாடு, எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், விவசாயம், மார்க்கெட்டிங், ஸ்டெனோகிராபர், கணக்கு, விவசாய கடைகள், இன்ஜினியரிங் கடைகள், டெக்னீஷியன் உள்ளிட்ட டிரைய்னி பதவி உட்பட உதவி மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் ஆகிய பதவிகள் வரை நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு :


துணை பொது மேலாளர் பதவிக்கு 50 வயதை கடந்திருக்கக்கூடாது.


உதவி மேலாளர் பதவிக்கு 30 வயதை கடந்திருக்கக்கூடாது.


டிரைய்னி பதவிக்கு அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம்.


மத்திய அரசின் வயது வரம்பு முறையின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு கூடுதலாக 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்படும்.


கல்வித்தகுதி :


பல்வேறு பிரிவுகளில் கீழ் இருக்கும் டிரைய்னி பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறைசார்ந்த பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


துணை பொது மேலேளர் மற்றும் உதவி மேலாளர் பதவிக்கு எம்பிஏ அல்லது அதற்கு நிகரான படிப்புடன் 2 முதல் 10 வருடங்கள் வரை அனுபவம் தேவை.


சம்பள விவரம் :


துணை பொது மேலாளர் பதவிக்கு ரூ. 70,000 முதல் ரூ.2,00,000 வரை வழங்கப்படும்.


உதவி மேலாளர் பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.


 மேனேஜ்மெண்ட் டிரைய்னிக்கு மாதம் ரூ.57,920. 


சீனியர் டிரைய்னி பதவிக்கு மாதம் ரூ.31,856 


 டிரைய்னி பதவிக்கு மாதம் ரூ.24,616 சமபளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை :


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கணினி வழி தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


விண்ணப்பிக்கும் முறை :


இப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் https://indiaseeds.com/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பிக்க கடைசி நாள்


30.11.2024


கணினி வழி தேர்வு 22.12.2024


மத்திய அரசு வேலைக்காக எதிர்பார்கிறவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 188 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள்படி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.


முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள 


https://www.indiaseeds.com/career/2024(2)Rec/RecAdv2024.pdf


கிளிக் செய்யவும்.


Online இல் விண்ணப்பிக்க 


https://apply.registernow.in/NationalSeedsCorp/Multipleposts24


கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment