அதிகனமழை எச்சரிக்கை:நாளை(16.10.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, October 15, 2024

அதிகனமழை எச்சரிக்கை:நாளை(16.10.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 அதிகனமழை எச்சரிக்கை:நாளை(16.10.2024)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நான்கு மாவட்டங்களில், மின்சாரம், நிதி நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து போன்ற முக்கிய சேவைத் துறைகள் தவிர மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை எச்சரிக்கை


வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னையில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

*மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


* கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16-10-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment