வீட்டில் செய்யக்கூடிய பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள்..!
தூதுவளை இலைகளை அரைத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக இருமல், சளி குறையும்.
சித்தரத்தைத் தூளை தேனில் கலந்து நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர தொண்டை சார்ந்த நோய்கள், இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.
அதிமதுரத்தை அரைத்து உடலில் பூசி குளித்து வர சொறி, சிரங்கு குணமாகும்.
நந்தியாவட்டை இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
பிரண்டை இலைகளுடன் உப்பு, புளி, பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து துவையலாக சாப்பிட செரிமானக் கோளாறுகள் மறையும்.
கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து அரைத்து பூசி, உடலில் ஊறவிட்டு பின் குளிக்க தோல் நோய்கள் குணமாகும்.
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
வெற்றிலையுடன் குங்குமப்பூ சேர்த்து சாப்பிட இயல்பான பிரசவம் ஏற்படும்.
மகிழமரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கிட பல்வலி குணமாகும்.
புதினா இலையின் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும்.
No comments:
Post a Comment