இன்று (02.10.2024) மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, October 2, 2024

இன்று (02.10.2024) மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்

 இன்று (02.10.2024) மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்


மகாளய அமாவாசை நாளான இன்று திதி கொடுக்க உகந்த நேரம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மேலும் மகாளய அமாவாசையின் பலன்களையும் பார்க்கலாம்.


மாதாமாதம் அமாவாசை வந்தாலும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசைக்கு விசேஷம் அதிகம். அந்த வகையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மாதந்தோறும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையின் போது தர்ப்பணம் செய்தால் நல்ல பலனை கொடுக்கும். இந்த நாளில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுக்காததற்கு சேர்த்து பலன் கொடுக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.


அப்படி சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு இரைக்க வேண்டும். இது எளிமையான தர்ப்பணம் ஆகும். மேலும் அவரவர் குடும்ப வழக்கபடி மகாளய அமாவாசையை செய்துக் கொள்ளலாம்.


மகாளய அமாவாசை நாட்களில் ராகு காலம், எமகண்டத்தை தவிர காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ப்பணம் கொடுக்கலாம். முன்னோர்களுக்கு வீடுகள், ஞானவாபி, மடம் போன்றவைகளை காட்டிலும் நீர் நிலைகளில் கொடுப்பது சிறப்பானது.


தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அன்னதானம் செய்யலாம். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ருக்களின் தோஷம் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு மகாளய அமாவாசை காலத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் அடுத்த தலைமுறையினருக்கும் ஆசிர்வாதம் கிடைக்கும்.


ராமேஸ்வரம், காவிரி படிகை, ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த மகாளய அமாவாசையில் முன்னோர்களை நினைத்து அன்னதானம் வழங்கினால் அவர்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும் என்கிறார்கள்.


செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 17 வரை மகாளய பட்ச காலம் என அழைக்கப்படுகிறது. இந்த காலத்தில் முன்னோர்களை நம் வீடுகளுக்கு எமதர்மன் அனுப்பிவைப்பதாக ஒரு ஐதீகம். இந்த காலகட்டத்தில் நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே பேச வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் போடக் கூடாது.

No comments:

Post a Comment