சுத்தமான நெய்யை கண்டுபிடிக்க உதவும் எளிய வழிகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 29, 2024

சுத்தமான நெய்யை கண்டுபிடிக்க உதவும் எளிய வழிகள்..!

 சுத்தமான நெய்யை கண்டுபிடிக்க உதவும்  எளிய வழிகள்..!


நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


நெய்யில் தாவர எண்ணெய், வனஸ்பதி மற்றும் விலங்கு கொழுப்புகள் கலக்கப்படுவதாக தற்போது பெரும் சர்ச்சையாகி வருகிறது.


இன்றைய காலத்தில் சுத்தமான நெய்யை கண்டுபிடிப்பது சவாலாக இருந்தாலும் சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதை கண்டறியலாம்.


சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது.


சிறிது நெய்யை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் வரை பாருங்கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.


இரண்டாவதாக, நெய்யை ஒரு வாணலியில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி பிரவுன் நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய். அதனை தவிர்த்து, காலதாமதமாக உருகி, மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும்.


ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும்.

No comments:

Post a Comment