குதிகால் வலியைப் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 8, 2024

குதிகால் வலியைப் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்..!

 குதிகால் வலியைப் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்..!


குதிகால் வாதத்துக்கு எருக்கு இலை சிறந்த நிவாரணி. செங்கல்லை அடுப்பில் போட்டு, நன்றாகச் சூடேறியவுடன் அதை எடுத்து, அதன்மீது ஐந்து எருக்கிலைகளை வைக்க வேண்டும்.


 குதிகால் வலியுள்ளவர்களை, வலியுள்ள பாகத்தைச் செங்கல்லின் மீது தாங்கக்கூடிய வரையில் வைத்து அழுத்தும்படிச் செய்ய வேண்டும். அந்தச் செங்கல் சூடு ஆறினாலும், மற்றொரு செங்கல்லை முன்புபோல் சூடேற்றி எருக்கிலையை வைத்து முன்பு போலவே செய்ய வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை மூன்று நாள்கள் செய்து வந்தால் வலி நீங்கிவிடும்.குதிகால் (குதிங்கால்) வாதத்துக்கு இது நல்ல குணத்தைக் கொடுக்கும்.


எருக்கிலைகளை நிறைய சேகரித்து வெற்றிலைக் கட்டுபோலக் கட்டிக்கொண்டு, கத்தியால் நடுப்பகுதியில் அறுத்துக்கொள்ள வேண்டும். அறுபட்ட பாகத்தைச் சூடாக்கிய வேப்பெண்ணெயில் தோய்த்து, பொறுக்கும் சூட்டில் ஒற்றடம் கொடுக்க வாதவலி, வீக்கங்கள் குணமாகும். வலிப்பு வந்தவர்களுக்கு உள்ளங்கைகளில் பூசிவந்தால் உடலில் சூடு உண்டாகி, உடல்வலி, சோர்வு, அசதி நீங்கும். எருக்கிலைகளை நன்றாக உலரவைத்து, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பிப் போட்டுவர புழுவைத்த புண்கள் ஆறும்.

No comments:

Post a Comment