உடலில் உள்ள தேமல் நீங்க இயற்கை மருத்துவம்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 22, 2024

உடலில் உள்ள தேமல் நீங்க இயற்கை மருத்துவம்..!

 உடலில் உள்ள தேமல் நீங்க இயற்கை மருத்துவம்..!


தேமல் உள்ளவர்கள் வியர்வை நீங்க, காலை,இரவு இருவேளை நன்றாக "நலங்குமா" பூசி குளிக்க வேண்டும்.


தேமல் "டீனியா வெர்சி கோலர்" என்னும் வகையைச் சார்ந்தது. இவ்வகை தேமல் உடலில் பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு ,கை போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும். சித்த மருத்துவத்தில்;


1. கந்தக ரசாயனம்-250-500 மிகி காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.


2. சீமை அகத்தி களிம்பு- தேமல் உள்ள பகுதிகளில் பூச வேண்டும்.


3. தேமல் உள்ளவர்கள் வியர்வை நீங்க, காலை,இரவு இருவேளை நன்றாக "நலங்குமா" பூசி குளிக்க வேண்டும்.


நலங்குமா செய்முறை:


சந்தனம், கோரைக் கிழங்கு, பாசிப்பயறு,வெட்டி வேர்,கிச்சிலிக் கிழங்கு,கார்போகரிசி,விலாமிச்சை வேர் இவைகளை சம அளவு எடுத்து பொடித்து வைக்க வேண்டும்.


 உடலில் வியர்வை நாற்றம் இருந்தால் ஆவாரம் பூ சேர்த்து கொள்ள வேண்டும், வாசனைக்காக ரோஜா இதழ்களும் சேர்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment