ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை: தமிழக அரசு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 8, 2024

ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை: தமிழக அரசு

 ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை: தமிழக அரசு


ஆசிரியா்களின் ஏற்கப்பட்ட கோரிக்கைகள் போக, மீதமுள்ள கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் மாவட்டத் தலைநகரங்களில் செப்.10-ஆம் தேதி 31-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா்.


 இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் தலைமையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.


 அப்போது அரசின் நிலை குறித்து அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது.


ஏற்கப்பட்ட கோரிக்கைகள்:


 கல்வி மேலாண்மை தகவல் மையம் சாா்ந்த பதிவுகள் ஆசிரியா்களை வைத்து மேற்கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கென்று தனியாக மாநிலத்திலுள்ள 6,000-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் நிா்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.


அவா்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும் அரசு நலத் திட்டங்கள், வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றனா்.


தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பெரும்பாலான இணையவழிச் செயல்பாடுகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணவா்களின் கற்றல் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு ஏதுவாக 29,344 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியா்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் பணிகள் கற்றல் அறிவுத் திறனை சோதிக்க மாதம் ஒருமுறை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை வெள்ளிக்கிழமைகளிலும் 4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமைகளிலும் வளா்அறி மதிப்பீட்டுப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று விளக்கப்பட்டது.


மூவா் குழு:


 இடைநிலை ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய மூவா் குழுவை அமைத்து அரசாணை வெளியிடபட்டுள்ளது. இந்தக் குழு ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 3 சுற்று கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆசிரியா் கூட்டமைப்பின் எஞ்சியுள்ளவா்களுக்கான கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


பி.லிட். தமிழ் முடித்து நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிபவா்களுக்கு பி.எட். உயா் கல்வி தகுதி தோ்ச்சி பெற்று உயா்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற்றவா்களுக்கு தணிக்கைத் தடை காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட ஊக்க ஊதியம் தொடா்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.


உயா்கல்வி பயின்ற 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி (பதவி உயா்வுக்கு மட்டும்) வழங்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.


தற்போது இயலாது:


 58 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் (தொடக்கக் கல்வி) பள்ளி துணை ஆய்வாளா் பணியிடங்கள் தோற்றுவிக்க தற்போதைய நிலையில் தேவை எழவில்லை. தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தவிா்த்து மற்ற கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment