மூச்சுப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 29, 2024

மூச்சுப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

 மூச்சுப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!


பிராணயாமம் மூச்சு பயிற்சி, உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது உங்கள் உடல் மற்றும் மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடல் மற்றும் மனம் சமநிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் அன்றாடம் பிராணயாமம் செய்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். 


‌ நுரையீரல் ஆற்றலை அதிகரிக்கிறது ‌


பிராணயாமம் உங்கள் உடலின் சுவாச மண்டலத்துக்கு வலு சேர்க்கிறது. இது நீங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சைக் கட்டுப்படுத்த உதவும். உங்கள் நுரையீரலின் திறனை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்திற்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கிறது.


‌ மனஅழுத்தம் மற்றும் பதற்றம் ‌


பிராணயாமம் செய்வதால் உங்களுக்கு மனஅழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறைகிறது. இதனால் மனம் அமைதிபடுத்தப்படுகிறது. நாடி சுத்தி பிராணயாமம் போன்ற பயிற்சிகள் (மூக்கின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு மறு துவாரத்தின் வழியாக சுவாசிப்பது) உங்களின் நரம்பு மண்டத்தில் துாண்டி உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைத்து, உங்களின் பதற்றத்தைப் போக்குகிறது.



‌ மனத்தெளிவு மற்றும் கவனம் ‌


நீங்கள் பிராணயாமம் செய்யும்போது, அது உங்களின் கவனத்தை அதிகரிக்கிறது. மனத்தெளிவை ஏற்படுத்துகிறது. மூச்சைக்கட்டுப்படுத்துவது உங்கள் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உங்களின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. நினைவாற்றல், கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற மூளையில் இயக்கங்களை அதிகரிக்கிறது.


‌ செரிமான ஆரோக்கியம் மேம்பாடு ‌


ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை நீங்கள் பிராணயாமத்தின் மூலம் மேற்கொள்ளும்போது, அது நரம்புகளைத் துாண்டுகிறது. செரிமானத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. வளர்சிதையை அதிகரிக்கிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. செரிமான கோளாறுகளை போக்குகிறது. செரிமானமின்னை மற்றும் அமில எதிர்ப்பு ஆகியவற்றை சரிசெய்கிறது.


‌ ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது ‌


ரத்த அழுத்தத்தை குறைக்க நீங்கள் அன்றாடம் பிராணயாமம் செய்வது உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது. அமைதி, ஆரோக்கியமான இதயத்துடிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை இது குறைக்கிறது.


‌ உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது ‌


பிராணயாமம் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து கார்பன்டை ஆக்ஸைடை குறைக்க உதவுகிறது. உள்புறம் இருந்து செய்யும் இந்த பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றல் சிறக்க உதவுகிறது.



‌ ஆற்றலை அதிகரிக்கிறது ‌


பிராணயாமம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது மற்றும் சோர்வை எதிர்த்து போராடுகிறது. உங்களை எச்சரிக்கையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நாள் முழுவதும் ஆற்றலைக் கொடுக்கிறது. ஒட்டுமொத்த திறனையும் அதிகரிக்கச் செய்கிறது.


‌ ஹார்மோன்கள் சமம் ‌

பிராணயாமம் உங்களின் உடலில் ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்த உதவுகிறது. ஹார்மோன் பிரச்னைகளால் அவதிப்படும் பெண்களுக்கு உதவுகிறது. குறிப்பாக தைராய்ட் மற்றும் பி.சி.ஓ.எஸ்., என்ற பிரச்னைகளால் அவதியுறும் பெண்களை காப்பாற்றுகிறது.


‌ மனநிலையை மேம்படுத்துகிறது ‌


பிராணயாமம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்தவில்லை உங்களின் மனஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்களிடம் ஏற்படும் எதிர்மறை சிந்தனைகளைப் போக்குவது உங்களின் மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் வாழ்வில் ஏற்படும் சவால்களை சந்திக்க உங்களை ஆயத்தப்படுத்துகிறது.

No comments:

Post a Comment