அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை தானாகவே பிளாக் செய்யும் வசதி:வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்
அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை தானாகவே பிளாக் செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை முயற்சியில் அறிமுகம் செய்துள்ளது.
நவீன காலத்திற்கு ஏற்ப செல்போன்களும், அதில் பயன்படுத்தப்படும் ஆப்களும் நாளுக்கு நாள் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிற ஆப்களுக்கு போட்டியாக வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ், ஸ்டேட்டஸ்களுக்கு லைக் போடுவது, AI வசதி என அடுத்தடுத்து புதிய அப்டேட்கள் பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை தானாகவே பிளாக் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பை அப்டேட் செய்த ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். வாட்ஸ்அப்பில் '> Settings '> Privacy '> Advanced '> Block unknown account messages என்ற முறையை பாலோ செய்வதன் மூலம், இந்த புதிய அம்சத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். குறிப்பாக, ஸ்பேம் மெசேஜ்களினால், செல்போனின் செயல்திறன் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக, இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment