கோவிலில் தீர்த்தத்தை எப்படி வாங்க வேண்டும்?தீர்த்தத்தை தலையில் தடவலாமா?
தீர்த்தத்தை எப்படி வாங்க வேண்டும்?
தீர்த்தத்தை வாங்கும் போது பெண்களாக இருந்தால் இடது கையில் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு, வலது கையை அதற்கு மேல் வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும். ஆண்களாக இருந்தால் அங்கவஸ்திரத்தை இடது கையில் பிடித்தபடி, வலது கையை மேல் வைத்து வாங்க வேண்டும். அங்கவஸ்திரம் இல்லாதவர்கள் வேட்டியின் ஒரு நுனியை பிடித்து வாங்க வேண்டும். அதுவும் இல்லாமல் நாகரீக உடைகளில் செல்வோர் இடது கை மேல் வலது கை வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும்.
தீர்த்தத்தை வாங்கி குடித்த பிறகு மீதமுள்ள தண்ணீரை தலையில் தடவிக் கொள்வது தான் நூற்றுக்கு 90 சதவீதம் பேர் வழக்கமாக செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது மிக தவறானது.
தீர்த்தத்தை தலையில் தடவலாமா?
நாம் கையில் வாங்கும் வரை அது புனிதமான தீர்த்தம். ஆனால் வாங்கி குடித்த பிறகு அது எச்சில் தண்ணீர் ஆகி விடுகிறது. இதை நமது தலையில் தடவிக் கொண்ட பிறகு, ஜடாரி வாங்குவது நமக்கு புண்ணியத்திற்கு பிறகு பாவத்தையே சேர்க்கும்.
ஜடாரி என்பது பெருமாளின் திருவடியாகும். எச்சில் தண்ணீர் தடவிய நமது தலையின் மீது பெருமாளின் திருவடி படுவது நமக்கு பாவத்தை மட்டுமே கொண்டு சேர்க்கும். இறைவனின் திருவடி நமது சிரசின் மீது பட்டால் தான் நமது அஞ்ஞானம் மறைந்து ஞானம் பிறக்கும். அதனால் தீர்த்தத்தை வாங்கி குடித்த பிறகு புடவை முந்தானையிலோ அல்லது ஏதாவது துணியிலோ துடைத்துக் கொள்ளலாம்.
ஜடாரி வாங்கும் போது, மிகவும் பணிவுடன், மனதார பெருமாளை நினைத்து வேண்டிக் கொண்டு வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment