நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக என்னென்ன சாப்பிடலாம்? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 14, 2024

நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக என்னென்ன சாப்பிடலாம்?

 நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக என்னென்ன சாப்பிடலாம்?


டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு உணவு முறை மிக மிக முக்கியம். இரவு உணவுக்கு பிறகு காலையில் வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை ஒழுங்குப்படுத்துவது மிக முக்கியமானது. காலை உணவை தவிர்ப்பது டைப்2 நீரிழிவு நோய் வளர்ச்சியுடன் தொடர்பில் உள்ளது. அதே நேரம் காலை உணவுகள் கார்போஹைட் கனமானதாக இருந்தால் அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடலாம். அதனால் நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.


நீரிழிவு நோயாளிகள் காலை உணவு சுவையானதாகவும், சத்தானதாகவும் நிறைவாகவும் இருக்க வேண்டும். நாளை சரியாக தொடங்க உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டிருக்கின்றன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகள் அளிக்கின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவுகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவு முட்டை


நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக முட்டை சாப்பிடலாம் என்று 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக புரதங்களை கொண்டுள்ளன. வேகவைத்த முட்டை இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிக்கும் எளிய புரதம் ஆகும். அதிக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கும். இதில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் கோலின் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கும்.


நீரிழிவு நோயாளிகளின் காலை உணவு சியா புட்டிங்


சியா விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இது நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றில் ஜீரணிக்க கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன. சியா விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து உண்டு இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். குடல் வழியாக இவை நகர்த்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சும் வேகம் குறையும்.

சியா விதைகளை ஊறவைத்து புட்டிங் செய்து சாப்பிடலாம்.இதனுடன் ப்ளூபெர்ரி, கொட்டைகள், உலர் பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.


நீரிழிவு நோயாளிகளின் காலை உணவு பழ சாலட்


சர்க்கரை நோயாளிகள் லோகிளைசெமிக் பழங்களை சேர்க்கலாம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தவிர்க்க சரியன பழங்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ரஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் குறைந்த ஜி.ஐ. கொண்ட ஆப்பிள் தோலுடன் பியர்ஸ் பழங்கள் சாப்பிடலாம். யோகர்ட் உடன் சில கொட்டைகள் போன்றவற்றை சேர்ப்பது புரதத்தின் மூலத்துடன் பழங்களை சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.


நீரிழிவு நோயாளிகளின் காலை உணவுக்கேற்ற பாசிப்பருப்பு தோசை


பாசிப்பருப்பு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிக புரத உள்ளடக்கம் தசை வெகுஜனத்தை பராமரிக்க உதவுகிறது. இது முழுதாக உணர வைக்கிறது. நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இவை எளிதானவை. பாசிப்பருப்பு இட்லி, பாசிப்பருப்பு தோசை, பாசிப்பருப்பு சுண்டல் போன்றவை சிறந்த காலை உணவுக்கு ஏற்றது.


நீரிழிவு நோயாளிகளின் காலை உணவுக்கேற்ற ஓட்ஸ்


ஓட்ஸ் சத்தான காலை உணவாகும். ஒப்பீட்டளவில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் இருந்தாலும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் பீட்டா குளுக்கன் என்னும் குறிப்பிட்ட நார்ச்சத்து கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை குறைக்கும் விளைவுகளுக்கு காரணமாகும். பீட்டா குளுக்கன் நீண்ட நேரம் முழுதாக உணர வைக்கிறது.


ஓட்ஸ் சுவையாக இருக்க அதனுடன் பெர்ரி, கொட்டைகள் விதைகள் போன்றவற்றை சேர்ப்பது ஆரோக்கியம் மேம்படுத்தும்.

No comments:

Post a Comment