பனங்கற்கண்டின் மகத்தான மருத்துவ பயன்கள்! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, September 1, 2024

பனங்கற்கண்டின் மகத்தான மருத்துவ பயன்கள்!

 பனங்கற்கண்டின் மகத்தான மருத்துவ பயன்கள்!


எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனியை பதப்படுத்துவதினால் கிடைப்பது பனங்கற்கண்டு. இதில் மகத்தான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.


*இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துகள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.


*பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி நீங்கும்.


*பனங்கற்கண்டை சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.


*உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.


*இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.


*கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.


*இதை பானமாக அருந்துவதால் இதய நோய் குணமாகும். இதயம் வலுவடையும்.


*இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.


*ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.


*கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.

No comments:

Post a Comment