காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத 7 உணவுகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 2, 2024

காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத 7 உணவுகள்..!

 காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத 7 உணவுகள்..!

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சில உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக செரிமானக் கோளாறுகள் அல்லது உடல் அசௌகரியம் ஏற்படும்.


அதன்படி, அதிக அமிலம், சர்க்கரை உள்ள பொருள்கள் என இந்த 7 உணவுகளை காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாது.


சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட் எனும் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.


அதே நேரத்தில் அமிலத் தன்மையும் அதிகம் இருக்கும். இதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிகமான அமிலத்தன்மை, வாயு பிரச்னை அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.


காபி


காலையில் எழுந்தவுடன் பெரும்பாலானோருக்கு டீ அல்லது காபி அருந்துவது அன்றாட வழக்கம். ஆனால், வெறும் வயிற்றில் காபி அருந்தக்கூடாது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது வயிற்றில் அமிலத்தைச் சுரக்கும், இதனால் வயிற்றில் எரிச்சல் அல்லது அசௌகரியம் ஏற்படலாம்.


சர்க்கரை பொருள்கள்


இனிப்புத்தன்மை நிறைந்த உணவோ அல்லது திரவமோ காலையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து மந்தமான அல்லது சோர்வான நிலையை ஏற்படுத்தும்.


காய்கறிகள்


காய்கறிகள் உடலுக்கு சத்துதான் என்றாலும் வேகவைக்காத காய்கறிகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இது சோர்வையும் ஏற்படுத்தலாம். வாயு தொந்தரவு, வயிறு வீக்கம் ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம்.


காரம்


காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காரம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுவும் வயிற்றில் செரிமானக்கோளாறுகளை ஏற்படுத்தும், வயிற்றுப் புண்கள் வரலாம்.


வாழைப்பழம்


வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இது உடலில் மெக்னீசியம் அளவை வெகுவாக அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் கால்சியம் மெக்னீசியம் சமநிலை இருக்காது.


சோடா


காலை எழுந்தவுடன் சோடா சாப்பிட்டால் வயிறு வீக்கம் வரலாம். இதில் உள்ள அதிகளவு கார்பன் டைஆக்ஸைடு, வயிற்றில் அமிலம் அதிகரிக்கக் காரணமாகிறது.

No comments:

Post a Comment