உடலுக்கு சத்தான 5 காலை உணவுகள்..!
நாம் காலையில் சாப்பிடும் உணவுதான் நம்மை நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நாம் காலையில் சாப்பிடும் உணவு நமது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக
வைத்திருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்.
1. முட்டை
அதிசிறந்த புரதத்தை தன்னுள் கொண்டுள்ள முட்டை மிகச் சிறந்த காலை உணவுக்கு சரியான தேர்வாகும். இது ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதோடு, உங்கள் வயிறும் நீண்ட நேரம் நிறைந்த உணர்வு இருக்கும். இது மூளை மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
2. பப்பாளி
காலையில் வெறும் வயிற்றிலேயே பப்பாளியை உண்ணலாம். ஆனால் இதை சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதையும் நீங்கள் உண்ணக் கூடாது. பப்பாளி வயிற்றை சுத்தப்படுத்துவதோடு, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
3. ஓட்ஸ்
நார்ச்சத்து நிரம்பிய ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாகும். இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஓட்ஸில் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின், துத்தநாகம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
4. கிரீன் டீ
கிரீன் டீயில் காபின் உள்ளது. இது உங்களை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். நல்ல ஆரோக்கியமான மனநிலையை உங்களுக்கு அளிப்பதோடு, உங்களுக்கு ஏற்படும் மனப்பதட்டத்தையும் குறைக்க உதவும்.
5. சியா சீட்ஸ்
நார்ச்சத்து நிறைந்துள்ள சியா விதைகள் மிகுந்த ஆரோக்கியமானதும் கூட. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது
No comments:
Post a Comment