இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ரூ 44,500 ஊதியத்தில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, September 12, 2024

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ரூ 44,500 ஊதியத்தில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு!

 இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ரூ 44,500 ஊதியத்தில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு!


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண்: HR/Recruitment/Aug/2024


பணி: Assistant Manager


பிரிவு: Actuarial


காலியிடங்கள்: 5


தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Actuarial பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Finance


காலியிடங்கள்: 5


தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் ACA, AICWA, ACMA, ACS, CFA இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Law


காலியிடங்கள்: 5


தகுதி: சட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: IT


காலியிடங்கள்: 5


தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணினி அறிவியல், மென்பொருள் பொறியாளர் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Research


காலியிடங்கள்: 5


தகுதி: Economics, Econometrics, Quantitative Economics, Mathematical Economics, Statistics, Applied Statistics & Information போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Generalist


காலியிடங்கள்: 24


தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ. 44,500


வயதுவரம்பு: 20.9.2024 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரண்டு நிலைகளில் நடைபெறும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.750. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: https://irdai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.9.2024

No comments:

Post a Comment