மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 28, 2024

மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்..!

 மிகவும் பயனுள்ள 21 கிச்சன் டிப்ஸ்..!


1.நான்கு பங்கு அரிசி மாவு, ஒரு பங்கு கடலைமாவு விகிதத்தில் கலந்து முறுக்கு செய்தால் சுவையாகவும், கரகரப்பாகவும் இருக்கும்.


2.முறுக்கு போன்ற தின்பண்டங்கள் பொரிக்கும் போது வாணலியின் அடியில் உப்பைத் தெளித்துவிட்டால் பண்டங்கள் ஒட்டிக் கொள்ளாது.


3.பச்சை மிளகாயை சூடான நீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து பயன்படுத்தினால் காரம் குறையும்.


4.வெந்தயக் குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கி போட்டு, குழம்பை இறக்கினால் வாசனையாக இருக்கும்.


5.உருளைக்கிழங்கு வறுவலில் வறுத்த நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், ஒரு தேக்கரண்டி அரிசியை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து சேர்த்தால் கூடுதல் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.


6.முட்டைக் கோஸை துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.


7.பொன்னாங்கண்ணி கீரையை நெய்விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து துவையல் போல் செய்து சாப்பிடலாம்.


8.அரிசி, பருப்புகளில் புழு அண்டாமல் இருக்க காய்ந்த கறிவேப்பிலைகளை அடியில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.



9.தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க அதை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கலாம். மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.


10.கூட்டுக்கு அரைக்க தேங்காய், சீரகம், மிளகாய்க்கு பதில் தேங்காய், ஓமம், பொட்டுக்கடலை, மிளகாய் அரைத்துப்போட வித்தியாசமான மருத்துவ குணமுள்ள கூட்டு ரெடி.



11.கோதுமை மாவில் பூச்சி, புழு வராமல் தடுக்க பிரிஞ்சி இலையை கோதுமை மாவில் போட்டு வைத்தால் எதுவும் அண்டாது.


12.நெத்திலி மீன் சமைக்கும்போது மீனின் நடுமுள்ளை நீக்கி கழுவி பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாங்காய் துண்டும் சேர்த்து அவியல் செய்தால் ருசியோ ருசி.


13.கணவாய் மீன் சமைக்கும்  போது பெருஞ்சீரகம், தேங்காய் வத்தல் சேர்த்து பொரியல் செய்தால் மணக்கும். கணவாய் மீனை கறி சமைக்கும் முறையில் சமைத்தால் கறியின் மணமும், ருசியும் கணவாய் மீன் சமையலில் இருக்கும்.


14.ரவா தோசை செய்யும்போது சிறிது கடலைமாவு சேர்த்தால் சுவை கூடும்.


15.இரண்டு கரண்டி ரவை, ஒரு கரண்டி அரிசி மாவு, ஒரு கரண்டி ஓட்ஸ் பவுடர் கலந்து தோசை வார்த்தால் சுவையான ரவை ஓட்ஸ் தோசை தயார்.


16.மோர்க்குழம்பில் தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால் குழம்பு மணக்கும்.


17.மோர் களியில் கிளறி முடித்த பின்னர் தனியே மோர் மிளகாயைக் காம்புடன் பொரித்துப் போட்டால் மிளகாய் கரகரப்போடு சுவைக்கும்.


18.வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்த பாயசம் போன்ற எதுவாக இருந்தாலும், பாயசம் நீர்த்து இருந்தால் வீட்டில் இருக்கும் ஏதாவது பிஸ்கட்டை லேசா கையில் பொடித்துப் போட சுவையும் கூடும்.


19.காராசேவு, காராபூந்தி செய்யும் போது 3 கப் கடலைமாவுக்கு, 1 கப் அரிசிமாவு என்ற விகிதத்தில் போட்டால் நன்றாக வரும். ஓமம், சீரகம், எள்ளு, வெண்ணெய் கலந்து செய்ய அருமையான சுவையுடன் இருக்கும்.


20.ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றி பிறகு பஜ்ஜி போட்டு எடுத்தால் வாசனையாக இருக்கும்.


21.ஒரு ஆழாக்கு அரிசி மாவிற்கு, ஒரு டீஸ்பூன் வறுத்து அரைத்த உளுந்தம்பருப்பு மாவு சேர்த்து செய்ய சீடை நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment