டைனிங் டேபிளில் நெய்யை வைத்துவிட்டு, சாப்பாட்டின் மீது அப்படியே கட்டியாக எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது நல்லதா?நெய்யின் 16 வகையான பலன்கள்!
* நெய் என்றாலே அது பசு நெய் தான். பசும் பால், நெய், வெண்ணெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை பஞ்ச கவ்யம் என்கிறார்கள் இன்று. ஆனால், தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தன்னுடைய நூல்களில் பசும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்ததுதான் பஞ்ச கவ்யம் என்கிறார்.
* உருக்கிய நெய்யைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பார்வை கூர்மையாகும் என்கிறது சித்த மருத்துவம்.
* கீரைகளில் இருக்கிற சத்துகள் உடலால் முழுமையாக உட்கிரகிக்கப்பட வேண்டுமென்றால், அதனுடன் உருக்கிய நெய் சேர வேண்டும்.
* சித்த மருத்துவத்தில் நெய் ஒரு துணை மருந்து. பற்பம், செந்தூரம் போன்ற சித்த மருந்துகள் உடலில் முழுமையாகச் சேர வேண்டுமென்பதற்காக அதனுடன் நெய்யைச் சேர்க்கிறோம்.
* ஆறு மாதத்திலிருந்து குழந்தைகளின் குடலிலுள்ள உறிஞ்சிகள் சத்துகளை விரைவாக உறிஞ்ச ஆரம்பிக்கும். உள்ளும் புறமும் குழந்தையின் வளர்ச்சி அதிகமாக இருக்கிற காலகட்டம் அது. அப்போது குழந்தைகளுக்குப் புரதம் அதிகம் தேவைப்படும். புரதம் குழந்தைகளின் உடலில் சேர உதவுவது நெய். அதனால்தான், குழந்தையின் ஆறாவது மாதத்திலிருந்து நெய் சேர்த்த பருப்பு சாதம் ஊட்ட ஆரம்பிக்கிறோம்.
* சங்க காலத் தமிழர்கள் இறைச்சியை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டதாக புறநானூறும் குறுந்தொகையும் சொல்கின்றன.
* சங்க நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் குறிப்பிடுகிற ஊன் சேர்த்த நெய்சோறுதான், இன்றைக்கு பலராலும் விரும்பப்படுகிற பிரியாணி.
* நோய் அணுகா விதிப்படி, குடிநீரைக் கொதிக்க வைத்தும், வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரை நிறைய நீர் விட்டு மோராக்கியும், நெய்யை உருக்கியும்தான் சாப்பிட வேண்டும். டைனிங் டேபிளில் நெய்யை வைத்துவிட்டு, சாப்பாட்டின் மீது அப்படியே கட்டியாக எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது கூடாது. அது பல நோய்களுக்கு வழி வகுக்கும்.
* கடந்த கால் நூற்றாண்டாக நெய் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து விடும் என்று அபாண்ட பழி சுமத்தப்பட்டுள்ளது. நெய்யை உருக்கிச் சாப்பிட்டால் இந்தப் பிரச்னை வராது. ஏற்கெனவே கொழுப்பு, இதய நோய் போன்ற பிரச்னையிருப்பவர்கள் உங்கள் மருத்துவரைக் கேட்டு நெய்யைச் சாப்பிடலாம்.
* நெய்யை உருக்கும்போது முருங்கையிலை அல்லது கறிவேப்பிலை சேர்த்தால், அவற்றிலிருக்கிற வைட்டமின் 'ஏ'வும் உணவில் சேரும்.
* ஒரு கைப்பிடி சுடு சோற்றில் உருக்கிய நெய்யைவிட்டு சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட குடல் புண்ணும் ஆறும்.
* நெய், காசநோய் வராமல் தடுக்கும்; இரைப்பு நோய்களைக் கட்டுக்குள் வைக்கும்.
* முதல் கவளம் சோற்றை 'சுக்கு - மிளகு - சீரகம் பொடியும், உருக்கிய நெய்யும் சேர்த்துச் சாப்பிட, செரிமான பிரச்னைகளே வராது.
* சோற்றுக் கொதி நீரில் நெய் விட்டு அருந்தினால், சாப்பிட்டவுடன் வயிற்றில் வருகிற வலி, வாயுத்தொல்லை இரண்டும் படிப்படியாகச் சரியாகும். தேவைப்பட்டால் இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
* பித்தம், உடல் எரிச்சல் இருப்பவர்கள் உருக்கிய நெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால் குணம் கிடைக்கும். ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இதைப் பின்பற்றலாம்.
* உடலின் நரம்புகள் அனைத்தும் உள்ளங்காலில் சென்று சேர்வதால், அங்கு நெய் பூசி தவிட்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
No comments:
Post a Comment