எஸ்பிஐ வங்கியில் 1,497 பணியிடங்களுக்கு ரூ85,920 ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்(பாரத ஸ்டேட் வங்கி) நிரப்பப்பட உள்ள 1,497 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO/2024-25/15
பணி: Specialist Cadre Officer
மொத்த காலியிடங்கள்: 1,497
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager(Systems)-Project Management & Delivery
காலியிடங்கள்: 187
பணி: Deputy Manager(Systems)-Infra Support & Cloud Operations
காலியிடங்கள்: 412
பணி: Deputy Manager(Systems)-Networking Operations
காலியிடங்கள்: 80
பணி: Deputy Manager(Systems)-IT Architect
காலியிடங்கள்: 27
பணி: Deputy Manager(Systems)-Information Security
காலியிடங்கள்: 7
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.64,820 - 93,960
பணி: Assistant Manager(System)
காலியிடங்கள்: 764
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
தகுதி:
Computer Science, Computer Engineering, IT, Electronics, Communication, Software Engineering, Software Technology, Computer Application போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், எம்.எஸ்சி அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
துணை மேலாளர் பணிக்கு 4 ஆண்டுகளும், உதவி மேலாளர் பணிக்கு 2 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக் கட்டணம்: ரூ.750. இதனை எஸ்பி வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.10.2024
மேலும் விவரங்கள் அறிய
https://sbi.co.in/documents/77530/43947057/130924-DETAIL+ADV_GITC+REGULAR_SCO_2024-25_15.pdf/0cc2be40-6407-ecdb-3099-effd169f7709?t=1726224993068
கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment