தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 105 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு..!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், கல்லூரி நூலகர் போன்ற 105 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், கல்லூரி நூலகர், கணக்கு அலுவலர், நிதி அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் போன்ற 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு பதவிகள்)-II பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் இணையவழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 693
அறிவிப்பு எண்: 12 2024
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மேலாளர் - 7
பணி: துணை மேலாளர் - 9
பணி: கல்லூரி நூலகர் - 17
பணி: கணக்கு அலுவலர் - 9
பணி: நிதி அலுவலர் - 6
பணி: தானியங்கி பொறியாளர் - 1
பணி: உதவி இயக்குநர் - 13
பணி: உதவி மேலாளர் - 12
பணி: கால்நடை உதவி மருத்துவர்- 31
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொது பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி ஆல் நடத்தப்படும் தமிழ் மொழித்திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முதன்மைத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு - 18.11.2024
முதன்மைத் தேர்வு - 18.11.2024 முதல் 20.11.2024 வரை நடைபெறும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.9.2024
மேலும் விவரங்கள் அறிய
https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf
செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment