வயிற்று வலி, வயிற்றுப் போக்கு வாந்தி,அஜுரணம்,பசியாமை உட்பட அனைத்து வயிற்று பிரச்னைகளிலிருந்து விடுபட எளிய வழிகள்!
உடல் சூடாவது, கண் பொங்குவது, வயிறு வலிப்பது போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட, தேநீரில் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாப்பிடவும். உடனடி நிவாரணம் தரும். நன்றாக பழுத்த பப்பாளிப்பழத்தைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்க வயிறு சரியாகிவிடும்.வயிற்றில் கோளாறுகள் இருந்தால், பார்லித் தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து அடிக்கடி சாப்பிடலாம். எந்தக் கோளாறென்றாலும் சரியாகிவிடும்.
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, 2 தேக்கரண்டி சாப்பிட, நெஞ்செரிச்சல் வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.2 தேக்கரண்டி சீரகத்துடன் 7 அல்லது 8 மிளகை வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக இடித்து சாதத்தில் கலந்து சாப்பிடவும். வயிற்றுக் கோளாறுகள், பசியின்மை, பித்தம் போன்றவைகள் நீங்கும்.
வயிற்றில் கோளாறுகள் இருந்தால் நல்ல இளங்கறிவேப்பிலையை ஒரு பிடி எடுத்து, எண்ணெய்விட்டு வதக்கிக் கொண்டு கொஞ்சம் புளி, உப்பு, 4 மிளகாய் வற்றல், இஞ்சி இவற்றை வறுத்து, அரைத்து சாதத்துடன் சாப்பிட, வயிற்றுக் குமட்டல், வாந்தி, அஜீரணம், மந்தம் போன்ற வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 1 தேக்கரண்டி பொடியில் தேன்விட்டுக் கலந்து வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் சாப்பிட உடனே குணம் கிடைக்கும். இதை 2,3 தரம் சாப்பிட வயிற்று போக்கு, வயிற்றுப் பிரட்டல் எல்லாம் குணமாகும்.சுக்கு, ஓமம், இந்துப்பு 3 ஐயும் எடுத்துக் கொண்டு, இலவங்கம் 10 கிராம் சேர்த்து வறுத்து பின் பொடியாக்கவும். இதை காலை, மாலை, அரை தேக்கரண்டி அளவு சாப்பிட, செரியாமை, மந்தம், பசியின்மை போகும்.
தட்டைப் பயறு வேக வைத்த நீரை சாப்பிட, வயிறு சம்பந்தமான அனைத்து வியாதிக்கும் குணமாகும்.அரை கப் வெது வெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துப் பருகிட, வயிறு வலியால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு குணமாகும்.
No comments:
Post a Comment