வாழைக்காயின் மருத்துவ நன்மைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, August 6, 2024

வாழைக்காயின் மருத்துவ நன்மைகள்..!

 வாழைக்காயின் மருத்துவ நன்மைகள்..!


வாழைக்காய் வாய்வை உண்டு பண்ணும் எனச் சொல்லி உணவில் சேர்த்துக் கொள்ள பலர் தயங்கு கிறார்கள். ஆனால் இது பல வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.


*உடலில் ரத்தம் குறைந்து பலமிழந்து இருப்பவர்கள் உணவில் வாழைக்காயை எந்த வகை பதார்த்தங்களாகச் செய்து சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்தம் விருத்தி ஆகி பலம் ஏற்படும்.


*உஷ்ணம் சம்பந்தமாக இருமல் ஏற்பட்டு கஷ்டப்படுபவர்கள் தினசரி உணவில் வாழைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறைந்து, விரைவில் குணமடைந்து விடுவார்கள்.


*பித்தம் சம்பந்தமான வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் பித்தம் படிப்படியாகத் தணியும்.


*சீதபேதி ஏற்பட்டிருக்கும் சமயம் முற்றிய காயை பில்லை பில்லையாக நறுக்கி மிளகு, உப்பு சேர்த்து, பசுவின் நெய் விட்டு சிவக்க வறுத்து சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.


*வாழைக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி, உப்பை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து அதில் நறுக்கிய காயை அரை மணி ேநரம் ஊறவைத்து எடுத்து, நெய் விட்டு வறுத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.


*வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி, கொத்தமல்லி, தேங்காய் தேவையான அளவு சேர்த்து அரைத்து, உப்புச் சேர்த்து பிசிறி வைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த சூடு சம்பந்தமான உடற் சூடு தணியும்.


*சிலருக்கு வாயில் அதிகமாக எச்சில் ஊறும். இப்படிப்பட்டவர்கள் தினசரி உணவில் வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் உமிழ் நீர் சமப்படும்.


வாழைக்காயை வாய்வு என்று நினைத்து சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உணவில் அடிக்கடி சேர்த்து, பலவித நோய்கள் ஏற்படாவண்ணம் உடலை காத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment