மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, August 25, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.


மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


 இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்.


முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.


தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.


புதிய ஒய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதிட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும்

No comments:

Post a Comment