சிவாலயங்களின் முகப்பில் நந்தி உருவ சிலை இருப்பதற்க்ன காரணம் என்ன? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 20, 2024

சிவாலயங்களின் முகப்பில் நந்தி உருவ சிலை இருப்பதற்க்ன காரணம் என்ன?

 சிவாலயங்களின் முகப்பில் நந்தி உருவ சிலை இருப்பதற்க்ன காரணம் என்ன?


சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருக்கும். அந்த சிலை சிவனை நோக்கி இருக்கும். நந்தியின் நான்கு கால்களும் நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம். அதாவது, சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு.


சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.


நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.


பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி வழிபாடு நற்கதியளிக்கும் என்பார்கள்.


சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. நந்தி (காளை) என்பவர் இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார். இவர் கயிலாய உலகின் வாயிற்காவலனாக விளங்குகிறார்.


சிவாலய தரிசன விதிகளில் முதன்மையானதும் முக்கியமானதும் எது தெரியுமா, ஆலயத்தில் நுழைவதற்கு முன்னால் நந்தியம்பெருமானை வணங்கி அவரிடம் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழையவேண்டும் என்பது தான். சிவனின் வாகனம் ரிஷபம் என்பது நாம் அறிந்ததே. அவரது வாயிற்காப்போனாகவும் சிவகணங்களின் தலைவனாகவும் நின்று சதா சர்வ காலமும் சிவபெருமானை மட்டுமே தம் சிந்தையில் கொண்டிருப்பதால்தான் எல்லா சிவாலயங்களின் முகப்பிலும் நந்தியின் சிலை காணப்படுகிறது. அவரிடம் அனுமதி பெறாமல் உள்ளே சென்று வழிபாடு செய்வதில் பலன் இல்லை.


பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.


காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.


நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.


நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர்.


அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும்.


இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.


பிரதோஷ காலத்தில் நந்திக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும். அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.


சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷபம் வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.


அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.


சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.


சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.


இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.


ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்ல கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரனே, தயவுசெய்து மூலவருக்கும் நந்திக்கும் இடையே செல்லாதீர்கள்.

No comments:

Post a Comment