வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் எந்த இடத்தில் பீரோ வைத்தால் சரியாக இருக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 21, 2024

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் எந்த இடத்தில் பீரோ வைத்தால் சரியாக இருக்கும்?

 வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் எந்த இடத்தில் பீரோ வைத்தால் சரியாக இருக்கும்?


நாம் சம்பாதிக்கும் பணம் நகை போன்ற மதிப்புள்ள பொருட்களை வைக்கும் பீரோ மற்றும் லாக்கர் வாஸ்து சாஸ்திரப்படி எந்த இடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். 


நாம் பலருக்கும் அதிக உழைப்பு போட்டாலும் அதற்கான வருமானம் வரவில்லையே, பணம் வந்தாலும் தங்கவில்லையே விரையச் செலவு ஆகின்றதே, சேமிப்பு என்பதே செய்யமுடியவில்லையே, கொடுத்த கடன் திரும்பக் கிடைக்குமா? என்று பலவித வருத்தங்கள் இருப்பதுண்டு. 


அதற்கு காரணம் நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பா? சிலர் வீட்டை மாற்றிவிடலாமா? வாடகை வீடு என்றால் மாற்றிவிடலாம், சொந்த வீடு என்றால் என்ன செய்வது என்று யோசிப்பார்கள்.


ஒருவருது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் ஏதோ தவறான செயல்பாடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு என்னதான் செய்வது என்றால்? நம் வீட்டில் ஒருசில விஷயங்களைச் சின்ன சின்ன மாற்றம் செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்கலாம்.


நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணம் நகை வீட்டில் பத்திரமாக வைக்கும் முக்கிய இடமாகப் பீரோ உள்ளது. அந்த பீரோவை நாம் சரியான திசையில் வைத்துள்ளோமா என்பதைக் கவனியுங்கள்? முதலில் பீரோவை வாஸ்து படி எந்த திசையில் வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தவிர்த்து நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.


வாஸ்துபடி அடிப்படை திசைகள் என்றால் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு என மொத்தம் எட்டு திசைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 45 டிகிரிக்கள் உள்ளன.


சாஸ்திரப்படி நிருதி மூலை என்றழைக்கப்படும் தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சிலருக்கு எந்த திசையை நோக்கித் திறக்க வேண்டும் என்று சந்தேகம் வரும். தெற்கு ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்கலாம்.


சரி, ஒருவேளை சிலரின் வீட்டில் இந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால் என்ன செய்வது?


இந்த மாதிரியான அமைப்பு இல்லை என்றால்? வாயு மூலை அதாவது வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே கிழக்கு நோக்கியும் பீரோவை வைக்கலாம். இதனால் நம் வீட்டில் வீண் செலவுகள் குறைந்து நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.


உங்க வீட்டில் பீரோவை மாற்றி வைத்திருந்தால் உடனே சரியான திசையில் அதை சரிசெய்துவிடுங்கள். இப்படிச் செய்வதால் நம் பிரச்னைகள் தீரும் என்றால் அதைச் செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே..

No comments:

Post a Comment