புளித்த இட்லி மாவை இனி கீழே கொட்டாமல் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்..? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, July 6, 2024

புளித்த இட்லி மாவை இனி கீழே கொட்டாமல் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்..?

 புளித்த இட்லி மாவை இனி கீழே கொட்டாமல் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்..?


இட்லி, தோசை செய்யத் தேவையான மாவை ஆட்டி, சிலர் ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவார்கள். சில நேரங்களில், அந்த மாவு புளித்துவிடும். புளித்த மாவு உடல் நலத்துக்குக் கேடு என்பதால் அதை சமைக்க மாட்டார்கள். அதை அப்படியே கீழே கொட்டிவிடுவார்கள்.


``தோசை மாவு என்பது அரிசி மற்றும் உளுந்தின் கலவை. இந்தக் கலவையில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஃபேகாலிஸ் (Streptococcus Faecalis), லாக்டோபாசிலஸ் ஃபெர்மென்டம் (Lactobacillus Fermentum), லுகோனோஸ்டாக் மெசென்டிராய்டுகள் (Leuconostoc mesenteroides) மற்றும் பேசிலஸ் அமிலோலிக்ஃபாசியன்ஸ் (Bacillus amyloliquefaciens) போன்ற நுண்ணுயிரிகள் இருக்கும். வெப்பநிலை மாறும்போது, தோசை மாவில் நொதித்தல் நடக்கும்.


நொதித்தலுக்குப் பிறகு தோசை மாவில் அதிக அளவு அசிட்டிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் காணப்படும். இதனால்தான் தோசை மாவு புளித்துப்போகிறது.


பொதுவாக, கழிவறைகளை சுத்தம் செய்ய அமிலத்தைத்தான் பயன்படுத்துவோம். புளித்த மாவிலும் அதிக அளவு அமிலம் இருப்பதால், கறை இருக்கும் இடத்தில் புளித்த மாவை பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவும்போது கறை நீங்கிவிடும். அந்த வகையில் பாத்ரூம் தரை, சிங்க் தொட்டி போன்றவற்றை பளிச் என்று ஆக்க புளித்த மாவை பயன்படுத்தலாம். அதேபோல, பாத்திரம் கழுவவும் இதைப் பயன்படுத்தலாம்.


மேலும், புளித்த மாவு சிறந்த ஃபேஸ் ஸ்கிரப் கூட. புளித்த மாவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடைவதுடன் சருமம் மென்மையாகும்.

No comments:

Post a Comment