ஆசிரியர்களின் புகைப்படங்களை அறிவிப்பு பலகையில் ஒட்ட மத்திய கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, அறிவிப்பு பலகையில் ஒட்ட, தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டியிருக்க வேண்டும் என, ஏற்கனவே மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு, தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில், மத்திய அரசை அதிகாரிகள் அணுகினர். அப்போது, பல்வேறு வழிகாட்டு முறைகளை பின்பற்ற, மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment