இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, July 17, 2024

இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பாக  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1,000 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருந்தது. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் முதலில் 1,768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது கூடுதலாக இடங்களை அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை 26 ஆயிரத்து 510 பேர் எழுத இருக்கின்றனர்.

No comments:

Post a Comment