பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு
தனியார் துறையைச் சேர்ந்த பிரபல வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள கிளை மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Branch Manager
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் வங்கி சார்ந்த பணிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: கரூர் வங்கி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு, வங்கி அல்லது நிதி நிறுவனம் சார்ந்த பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விவரங்கள் தகுதியானவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kvb.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பத்தில் பணிக்கான பணி குறியீடு ஐடி குறிப்பட வேண்டும். செயல்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.7.2024
மேலும் விவரங்கள் அறிய
https://www.karurvysyabank.co.in/Careers/docs/Elilibility%20Norms%20-%20BM.pdf
கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment