- Minnalseithi

Latest

Search This Blog

Sunday, July 21, 2024

 சுவையான தட்டைப்பயிறு குழம்பு   செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


தட்டைப்பயிறு - 150 கிராம்


கத்திரிக்காய் - 2


சின்ன வெங்காயம் - 15


பூண்டு - 10 பல்


குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்


தனி மிளகாய் தூள் - அரை ஸ்பூன்


மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்


பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்


புளி - நெல்லிக்காய் அளவு


நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்


கருவேப்பிலை - சிறிதளவு


தாளிப்பதற்கு - கடுகு வெந்தயம் - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


வறுத்து அரைப்பதற்கு தேவையான பொருட்கள்


மிளகு - 1 ஸ்பூன்


சீரகம் - 1 ஸ்பூன்


சின்ன வெங்காயம் - 10


தக்காளி - 2


தேங்காய் நறுக்கியது - ஒரு கைப்பிடி அளவு


செய்முறை:


* தட்டப்பயிறு எட்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.


* 15 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


* கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


* ஊறவைத்த தட்டப்பயிறு அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.


* கடாய் அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு இரண்டு சின்ன தக்காளி சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு இதனுடன் தேங்காயும் சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.


* இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


* கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பெருங்காய்த்தூள் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.


* பின்பு அதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.


* இதனுடன் கத்தரிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு அதனுடன் புளித்தண்ணீர் தட்டைப்பயிறு வேகவைத்த தண்ணீர் சேர்த்து கத்தரிக்காயை வேக வைக்கவும்.


* அரைத்த மசாலா விழுது சேர்த்து அதையும் சிறிது வதக்கி விட்டு 2 டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட்டு அதனுடன் தட்டைப்பயிறு சேர்த்து அதையும் கொதிக்கவிட்டு இறக்கினால் மிகவும் சுவையான தட்டைப்பயிறு குழம்பு ரெடி.

No comments:

Post a Comment