எளிமையான முறையில் சுவையான வாழைப்பூ சாதம் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, July 11, 2024

எளிமையான முறையில் சுவையான வாழைப்பூ சாதம் செய்வது எப்படி?

 எளிமையான முறையில் சுவையான வாழைப்பூ சாதம் செய்வது எப்படி?


வாழைப்பூவில் பெருமளவில் மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த வாழைப்பூவை குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. வாழைப்பூ குழந்தைகளுக்கு எப்படி எளிமையான முறையில் செய்து கொடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்....


தேவையான பொருட்கள்:


வேகவைத்த சாதம் - தேவையான அளவு


வாழைப்பூ - 1


கடலைப்பருப்பு - 3 ஸ்பூன்


உளுத்தம்பருப்பு - 3 ஸ்பூன்


பூண்டு - 7 பல்


வரமிளகாய் - 5


கறிவேப்பிலை - தாளிக்க


வெங்காயம் - 1


மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்


எண்ணெய் - தேவையான அளவு


கடுகு - 1 ஸ்பூன்


பெருங்காயத்தூள் - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


பொடி அரைக்க...


• ஒரு வாணலியில் கடலைப்பருப்பு 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன், பூண்டு 7 பல், வரமிளகாய் 3 போன்வற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


• பின்னர் வறுத்த பொருட்களை நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


செய்முறை:


• வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.


• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.


• எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொறியவிடவும்.


• கடுகு பொறிந்ததும் கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன், வரமிளகாய் 2 ஆகியவற்றை சிறிது வதக்கவும்.


• பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.


• வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த வாழைப்பூவை போட்டு நன்கு வதக்கவும்.


• இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூ, உப்பு சேர்க்கவும்.


• வாழைப்பூவில் உள்ள நீர் நன்கு வடிந்தவுடன் தயாரித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கிளறவும்.


• அதன் பின்னர் வேகவைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறவும்.


• இதோ சுவையான வாழைப்பூ சாதம் ரெடி.

No comments:

Post a Comment