வங்கிகளில் 665 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, July 1, 2024

வங்கிகளில் 665 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

 வங்கிகளில் 665 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 665 கிளர்க் பணியிடங்களுக்கு  27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களுக்கு அடுத்த நோட்டிபிக்கேஷன் வரப்படும்.

அதனை தொடர்ந்து உங்களுக்கு 2 கட்டங்களாக, அதாவது ப்ரீ தேர்வு, மெயின் தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதமும், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வை ஆங்கிலப்பாடம் தவிர மற்றவைகளை தமிழிலும் எழுத முடியும்.

இதில் பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா. பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இதில் ஒரு வங்கியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி:

இந்திய, நேபால், பூட்டான் குடிமகனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு திபெத்தியன் அகதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சான்றுகள் வைத்திருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், 20 வயது முதல் 28 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே அப்ளை செய்ய முடியும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எப்படி அப்ளை பண்ணுவது?

விண்ணப்பதாரர்கள் official இணையதளமான CRP CLERKS என்ற இணையதளத்திற்குள் சென்றால் அதில் Apply online என்ற ஆப்ஷன் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் சென்றால் CLICK HERE FOR NEW REGISTRATION என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு உங்களது பெயர் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தால் உங்களது மெயில் ஐடிக்கு ரெஜிட்ரேஷன் நம்பரும், பாஸ்வோர்டும் கொடுக்கப்படும். இந்த பாஸ்வேர்டை நீங்கள் வேண்டுமென்றால் எடிட் செய்து கொள்ளலாம்.

பிறகு இந்த நம்பரையும், பாஸ்வேர்டையும் கொண்டு எளிதில் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். தேர்வுக்கு அப்ளை செய்வதுக்கு முன்பு உங்களிடம் உங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையெழுத்து, இடது கை பதிவு ரேகை உள்ளிட்டவைகளை எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு மும்பையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment