சுவையான பனீர் 65 செய்வது எப்படி?
தேவையானவை:
பனீர் - 2 பாக்கெட் (400 கிராம்)
இஞ்சி - பூண்டு கலவை -
ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -
முக்கால் டீஸ்பூன்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
அரிசி மாவு - ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
நறுக்கிய கொத்தமல்லித் தழை,
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பனீர், எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக இல்லாமல், சற்று தளர்வாக இருக்கும்படி பிசைய வேண்டும்.
வெட்டி வைத்திருக்கும் பனீரை மசாலாவுடன் சேர்த்துப் பிசற வேண்டும்.
அதிக அழுத்தம் கொடுக்காமல், பனீரில் மசாலா ஒட்டும் வகையில் மென்மையாகப் பிசைந்தால் போதுமானது.
இந்தக் கலவையை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பனீரை சேர்த்துப் பொரித்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment